வதந்திகளை பரப்பாதீர் நம்பாதீர்

கொஞ்ச நாள் முன்னாடியே எழுதனும்னு நினைச்சது.
இப்போ பக்கமா தொண்டை அடைப்பான் நோய்க்கு 40 வருஷம் கழிச்சு ரெண்டு குழந்தைங்க இறந்துபோனது இப்போ மறுபடி போலியோ போடாதீங்க உத்திர பிரதேசம் போல ஆகிடும்ன்னு ஒரு போஸ்ட் சுத்தனது பாக்கறேன். இதுக்குன்னு பேஜ்லாம் வேற இருக்கு அதெல்லாம் பார்த்ததும் எழுதனும்னு தோணிச்சு.
கடந்த பல வருசமா இந்தியா போலியோ இல்லாம இருக்க காரணம் போலியோ சொட்டு மருந்துதான். 40 வருஷம் வராம இருந்த தொண்டை அடைப்பான் திரும்ப வந்தது போல இப்படி தடுப்பூசி போடாதீங்கன்னு உலரிட்டு இருந்தா அதே போல தான் போலியோவும் திரும்பி வரும்.
தடுப்பூசி வகைகள் தேவைகள் முக்கியத்துவம் எல்லாம் 8வதுலயே இருக்கு அதெல்லாம் படிச்சிட்டு, இப்படி பேஸ்புக்ல எல்லாம் எதாவது சொல்றது இதுக்கு UP உதாரணம் வேற. இதெல்லாம் யாராவது சொல்லிட்டு இருக்காங்கன்னு கேட்டுட்டு உங்களுக்கு தெரிஞ்சவங்க பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடறது போலியோ போடறது நிறுத்திடாம பார்த்துக்கோங்க.
மாற்று மருத்துவத்தை எல்லாம் தடுப்பூசிய நிறுத்தி ஆதரிக்கணும்னு இல்ல.

Say your thought