மதன் வெட்ஸ் நந்தினி

ஹலோ அண்ணா, சென்னை எப்படி இருக்கு.

ம்…. ஜில்லுனு இருக்கு,

சென்னையே ஜில்லுனு இருக்கா, இல்ல அண்ணி போட்டோ பார்த்ததுல உனக்கு ஜில்லுனு இருக்கா.

அண்ணி போட்டோவா?……. 

ஆமா, உனக்கு மெயில் பண்ணாங்களே, நீ பார்க்கலயா.

ஏன் டா………., என்கிட்ட யாரும் எதுவும் சொல்லல, இந்த பொண்ணு சென்னைல இருக்காளா!!!!!!!!!! சரி போன வை.

அண்ணா…………

வை, நான் அப்புறம் கூப்பிடறேன்.

ஹீரோயின் போட்டோ பார்த்து நம்ம ஹீரோ பிரீஸ் ஆகிட்டாரு. ஏன்னு அவரே சொல்லுவாராம் இன்னும் கொஞ்ச நேரத்துல.


அதுக்குள்ள நான் அவர பத்தி சொல்றேன்.

மதன் வீட்டுக்கு மொத பையன். அதுக்குண்டான பொறுப்பு, அடாவடி எல்லாம் இருக்கற ஆளு. நம்ம மணிரத்னம் சார் மட்டும் ரோஜா படம் எடுக்கலேன்னா, இவரு இந்நேரம் ஆர்மில க்ரிப்ட்டோகிராபரா இருந்திருபாரு. அவரு அதுல அரவிந்த்சாமிய க்ரிப்ட்டோகிராஃபரா காட்டி அவர கடத்திட்டதால, மைதிலி நந்தகுமாரன் இவர ஆர்மில சேர விடல. அதனால செக்யூரிட்டி சாப்ட்வேர் டெவெலெப்மெண்ட் கம்பெனி நடத்தறாரு சென்னைல.


ஹலோ நந்தினி, நான் மதன் பேசறேன்.

நானே உங்களுக்கு பேசனுன்னு நெனச்சேன்.

அப்படியா! என்ன விஷயம்?

இல்ல எங்க வீட்ல உங்க ப்ரொஃபைல் பார்க்க சொன்னாங்க. அவங்க கிட்ட கல்யாணம் வேணாம்னு சொல்ல முடியாது, சொன்னாலும் ஒத்துக்க மாட்டாங்க. நீங்க பொண்ண புடிக்கலைன்னு சொல்லிட்டா கல்யாணம் நின்னுடும் அதான்.

அடிப்பாவி கல்யாணத்தை நிறுத்தத்தான் போன் பண்ணனும்னு நெனச்சியா நான் கூட ஏதேதோ நினைச்சிட்டேன்(மனசுகுள்ளதான்.)

என்னை புடிக்கலைன்னு சொல்லி நீங்க கல்யாணத்தை நிறுத்தலாமே. அத விட பெட்டெர், உங்களுக்கு சொல்ல விருப்பம்னா, ஏன் கல்யாணம் உங்களுக்கு வேணாம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?!

எனக்கு இப்போ கல்யாணம் பண்ற ஐடியா சுத்தமா இல்லையே. 

எனக்கும் தான் இல்ல……………. ஆனா, உன் போட்டோ பாத்ததுக்கு அப்புறம் யோசிக்கலாம்னு தோணுது.

புரியல.!

    நீ நனையறதுக்கு ஆட்டின மரத்துக்கு கீழ நின்னு நானும் நனைச்சு இருக்கேன், உன்னால.

ஊரே பார்க்கற படத்தவிட்டு புதுசா ஏதாவது ட்ரை பண்ண படத்துக்கு போனா தியேட்டர்லயும் நீ. சரி கோயம்புத்தூர்ல தான் அப்படினா. ட்ரைன்ல திரும்பி படுத்தா எதிர் பர்த்ளையும் நீ.

சென்னைல புக்பேர்…. 

 இத்தனை நாளாய்

காதலித்து கொண்டு இருக்கிறோம்     

இன்னும் புதிதாய்

என்ன கொஞ்சல் என்கிறாய்,

அதே நாசி அதே காற்று

ஒவ்வொரு முறையும்

புதிதாய் சுவாசிப்பது இல்லையா 

 

உன்னை அழைத்து போக வந்தேன்நர்சிம். இன்னும் தேடிட்டு தானே இருக்க? நானும்தான்.

இப்படி எல்லாம் என்னை எனக்கே திருப்பி காட்ற, கண்ணாடி பொண்ண எப்படி புடிக்கலைன்னு சொல்லமுடியும்.

அதுக்குனு கண்டதும் காதல்னு எல்லாம் சொல்லல. ஆனா, ஏதோ உன்னை புடிக்கலைன்னு சொல்லி, நானா கல்யாணத்த நிறுத்தறது, எனக்கே எதிரா நான் செய்யற ஒரு விஷயமா இருக்கு. எனக்கு புடிச்ச மாதிரி எல்லாம் இருக்க ஒரு பொண்ணு என்னை தேடி வரும்போது நானா ஏன் தவிர்க்கணும்னு இருக்கு.

நீ யோசிச்சு பாரேன்.

உனக்கும்தான் கல்யாணத்த வேணாம்னு சொல்ல எதுவும் காரணம் இல்லை.

இல்லை.

கல்யாணம் பண்ணிக்க எப்படி காரணம் இல்லையோ அதே மாதிரி வேணான்னு சொல்லவும் எனக்கு காரணம் இல்ல.

இல்லைதான். ஆனா திடிர்னு கல்யாணம் புதுசா யாருன்னே தெரியாத ஒருத்தர், மொத்தமா புதுசா ஒரு ஃலைப் ஸ்டைல்…… 

இப்போ உன் பிரச்சனை திடிர்னு கல்யாணம் அதானே. நான் அதை பாத்துக்கறேன்.

அப்போ யோசிக்கலாம்.

நல்ல டைம் எடுத்து யோசி. என்ன வேணும்னு சொல்றதுக்கும், வேணாம்னு சொல்றதுக்கும் எதாவது காரணம் கிடைக்கும் இல்ல உனக்கு இந்த டைம்ல.

ஆனா டைம் எப்படி கிடைக்கும்.

அது யோசிப்போம், நான் உங்க அப்பாகிட்ட பேசறேன்.

சரி.

(அப்பாடி எவ்ளோ பேசவேண்டியிருக்கு.)


ஹலோ டாடி,

சொல்லுடா, என்ன உன் தம்பி கிட்ட அப்பறம் போன் பன்றேனு சொல்லி அரைமணி நேரம் கழிச்சு பன்ற.

ஹ்ம்ம். உங்க மருமக கூட பேசிட்டு இருந்தேன்.

டேய் நீயா முடிவெடுத்துட்ட, அவளுக்கு ஓகேவா.

அத சொல்லதான் அப்பா கூப்டேன்.   

எனக்கு இப்ப உடனே கல்யாணம் பன்ற ஐடியா இல்ல அவளுக்கும் அப்படிதான்.

அதனால, அவங்க அப்பாகிட்ட  பேசி கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் வெச்சிக்கலாம்னு சொல்லுங்க.

அப்போ இப்போதைக்கு நிச்சயம் வெச்சுக்கலாம்.

அதெல்லாம் வேணாம், நான் அவகிட்ட உனக்கு என்னை பிடிச்சு இருக்கா  இல்லையானு யோசிக்க டைம் ரெடி பன்றேனு சொல்லிட்டு  நிச்சயம் பண்ணா  அது சரியே இல்ல, அதுக்காக எல்லாம் அவ என்ன கல்யாணம் பண்ண கூடாது டாடி.

அப்பறம் அவங்க அப்பாகிட்ட என்ன பேசறது வேற நல்ல மாப்பிள்ளை வந்தா அவங்க பொண்ணுக்கு அவங்க கல்யாணம் பண்ணிவெச்சிடுவாங்கலே.

டாடி….. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு, நீங்க என்ன இப்படி பேசறீங்க, அதெல்லாம் அவ வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கமாட்டா.

என்னடா இப்படியும் சொல்ற அப்படியும் சொல்ற.

அப்பா, அவ என்னை வேணான்னு சொல்ல போறதில்ல. ஆனா உங்க எல்லாருக்காவோ, இல்ல நிச்சயம் பண்ணிட்டதுக்காகவோ என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு சொல்றேன் அவளோ தான்.

சரி உன் அம்மாட்ட என்ன சொல்ல.

எனக்கு ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் இருக்கு, முடிக்க டைம் ஆகும்னு சொல்லுங்க.   

      “மலர் மஞ்சம் விழி கெஞ்சும் மனம் மஞ்சம் அல்லவா

        உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சம் அல்லவா  

        உன் தனிமை கதவின் தாழ் நீக்கவா”(நந்தினியோட ரிங்க்டோன் மதனுக்கு மட்டும்)

குட் மார்னிங் மதன்.

குட் மார்னிங், என்ன பண்ணிகிட்டு இருக்க.

நைட் தூங்கனதே ரொம்ப லேட். இப்போ தான் எழுந்தேன், டீ குடிக்கணும் போல இருக்கு, ஆனா ரொம்ப நேரம் ஆகிடுச்சு, ஹாஸ்டல்ல இப்போ டீ குடிக்க முடியாது.

சரி கீழ வா, போய் டீ குடிச்சிட்டு வரலாம்.

என்னது?!

நான் உன் ஹாஸ்டலுக்கு வெளிய நிக்கறேன். வா டீ குடிக்க போலாம்.

நான் இப்போவேவா,எப்படி?

அப்படியே உன் பட்டியாலா நைட் சூட் மேல ஒரு குர்தா போட்டு வந்தேனே 2 நிமிஷம் தான் ஆகும்.

(பதில பாரு). நீங்க ஏன் வந்தீங்க இப்போ?.

நான் போட்ட டீ சரியாய் வரல, அதான் நல்ல டீ குடிக்கலாம்னு வந்தேன். சீக்கரம் வா, இல்லேன்னா பிரேக்பாஸ்ட் டைம் ஆகிடும்.

பரவாயில்லையே சீக்கரம் வந்துட்டியே.

டீ நல்லா இருக்கு இல்ல இங்க.

ஆமா எனக்கு அடிக்கடி தேவைப்படும்னு நினைக்கறேன்.

ஏன்?

நீ இந்த நேரத்துக்கு எழுந்து டீ போட்டு குடுத்து, என் வருங்காலத்தை நெனச்சா திகிலா இருக்கே.

ஹ ஹா. இப்போவே பயந்தா எப்படி மதன். நீங்க டீ போட்டு குடுத்தா கூட எனக்கு ஓகே தான்.

அடிப்பாவி.

சரி சாயந்தரம் பீச் போலாம் பொறுமையா ரெடி ஆகிட்டு போன் பண்ணு.

சரி சரி.


ஈவ்னிங் சென்னை சிக்னல்

மதன்…………………….

சாரி சார் சாரி சார்.

சரி போங்க.

ஹே நந்து ஒன்னும் இல்ல, ரிலாக்ஸ் ரிலாக்ஸ்., என்ன பாரு,இங்க பாரும்மா என்ன.

சோம்பேறி, மேல ஏறி வந்து இருக்கலாம் இல்ல. ஏன் இவளோ பெரிய ரோட அப்படியே கிராஸ் பண்ற.

கத்தாதடி, எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க, ஹே இவளோ பெரிய ரோட அவங்க போடற கொஞ்ச நேர க்ராஸிங் டைம்ல கிராஸ் பண்ண சோம்பேறியால எப்படி முடியும். 


கோவை:

வாங்க வாங்க, வாங்க அத்தை,

நிச்சயத்துக்கு போடற செயின் டிசைன் செலக்ட் பண்ண உன்ன கூட்டிட்டு போலாம்னு வந்தேன் நந்தினி.

இதுக்கெல்லாம் நீங்க அலையனுமா, உங்களுக்கு பிடிச்சதா வாங்கினாலே நல்லாதான் அத்தை இருக்கும்.

நீ வேற நானே செலக்சன் ல வீக், அதான் உன்னை கூப்பிடலாம்னு வந்தேன்.   

மேடம் நந்தினி பேருக்கு ஒரு ஆர்டர் வந்து இருக்கு.

இதோ வரேன்.

மொபைல் போன் மதன் தான்அனுப்பி இருக்காரு அத்தை.

ஹலோ மதன்,

சொல்லுங்க மேடம்.

இப்ப எதுக்கு இந்த புது போன். தேவை இல்லாத செலவு.

சரி விடு.

என்ன விடு, கேக்கறேன் இல்ல. ஹலோ ஹலோ, போன வெச்சுட்டாரு .

பேசிக்கிட்டு இருக்கும் போதே போன்  வெச்சுட்டானா, நீ திருப்பி கூப்படாத மா.

என்ன அண்ணி நீங்களே இப்படி சொல்லிதரீங்க(அது ஒன்னும் இல்லைங்க மதன் நந்தினிக்கு குடுத்த டைம்ல ரெண்டு குடும்பமும் பயங்கர க்ளோஸ் ஆகிட்டாங்க)

அவன் கூப்டா பேசாதன்னு சொன்னாதான் தப்பு. அதென்ன பேசிகிட்டு இருக்கும்போது கட் பன்றது.

இவளும் தான் போன் எடுத்தும் இப்படிகேள்வியா கேட்டா மதனுக்கு டென்ஷன் ஆகாதா.

இவங்க ஆள் மாத்தி ஆள் சப்போர்ட் பண்ணதுகுள்ள அவங்க ரெண்டுபேரும் சமாதானமே ஆகிட்டாங்க.

சரி அத்தை கெளம்பலமா, போலாம்.

இந்த வாரம் போய்டு மறுபடியும் கல்யாணத்துக்கு போடற லீவுக்கு தான் ஊருக்கு வரியா நந்து ஆமா அத்தை.

இந்த பையன் அதுக்கும் அப்பறம் தான் வரான் என்னதான் பன்றது, இவன் டைம் கேட்டதும் அதெல்லாம் நான் என் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பாத்துக்கறேன்னு சொல்லி இருந்தா அப்பவே கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லி இருப்பான்.

இத கேட்டு நத்தினிக்கு இரும்மல் வந்தது உங்களுக்கு தெரியுதா.


“கண்கள் பார்த்தே கவி ஆனேன்

இன்னும் பார்த்தால் எங்கே போவேன்

உன்னாலே கம்பன் தாண்டுவேன்”(மதனோட ரிங்க்டோன்)

 நான் நாளைக்கு ஊருக்கு கெளம்பறேன் மதன், நியாபகம் இருக்கா?

அந்த கொடிய நாள எப்படி மறப்பேன்.

சரி சரி, மறுபடியும் ஆரம்பிக்காதீங்க பாஸ். நாளைக்கு ஸ்டேஷன்ல பாக்கலாம்.

சென்ட்ரல் ஸ்டேஷன்:

உன் ஆபீஸ்ல எப்படி இவ்வளோ நாள் லீவ் குடுத்தாங்க.

எல்லா பாஸும் உங்கள மாதிரியேவா இருப்பாங்க.

இப்பவே போய் என்ன பண்ண போற நீ, எனக்கு வேற வேலை செம்ம டைட்.

பொய் சொன்னா இப்படித்தான். நீங்க சொன்ன மாதிரியே வேலை அதிகமாகிடுச்சா.

எல்லாம் உன்னாலதான்.

ஹலோ Mr. மதன், நான் நம்ம கல்யாணத்துக்கு தான் போறேன். எதோ கல்யாணத்துக்கு அப்பறம் எங்க அம்மா வீட்டுக்கு போற மாதிரி சீன் போட்றீங்க.

எனக்கு ரெண்டும் ஒன்னுதான்.

போதும் போதும், ட்ரைன் கெளம்ப போகுது.

பாரு உனக்கு கம்பெனிக்கு இந்த குட்டி பொண்ணு வேற என்ஜாய்.

பாய் பாய்.

ஆன்டி அந்த அங்கிள் யாரு?

என் ஹஸ்பண்ட் மா (பாரடா).

 

 செப்டம்பர் 5:

பத்திரிக்கை வாசிக்கலாமா,

வாசிங்க,

நிகழும் ஆனந்த வருடம் ஆவணி மாதம் 21ம் தேதி கோவை நந்தகுமாரன் – மைதிலி மகன் மதன்க்கும், முரளி – தேவி மகள் நந்தினிக்கும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் நடைபெற உள்ளது.

தங்கள் நல்வரவை ஆவலுடன் விரும்பும் குடும்பத்தினர்

 

 

 

 

 

 

 

6 Comments

  1. sweeeeeeeeeeeetttttttttttt ah thirumba saapteney nu sollanum…. eppo padichaaalum sweet ah feelaakira oru cute story.. intha time thaan madan parents nandhi parents name ellam kavanichen…simple names aaaana semma matching..azhagu

    Liked by 1 person

    1. ❤ ❤ ❤ . Eppavum sweet ah irukutha. kekka semma sweet ah iruku. Antha name lam appadiyee pakkathula thirumbi takkunu oru per sollu nu kettu ezhuthuvathu 😀 😀

      Like

  2. இத்தனை நாளாய்

    காதலித்து கொண்டு இருக்கிறோம்

    இன்னும் புதிதாய்

    என்ன கொஞ்சல் என்கிறாய்,

    அதே நாசி அதே காற்று

    ஒவ்வொரு முறையும்

    புதிதாய் சுவாசிப்பது இல்லையா

    Semmmaaa…
    Romba cute aana story… Rendu perukum ulla oru friendly love super ah irukku…

    Like

  3. Mano sis.. Super aa iruku.. Short story la vithamana relation frndly,love , marriage , understanding orey time la solli irukinga.. Read so many times.. Evalo time padichalam chinna smile irunthutey iruku… Rendu peroda ringtone ellam extra ordinary spl… Intha mathri spl ringtone vacha Romba pidikum … Thank u so much for giving us such a wonderful and lovely story…

    Liked by 1 person

    1. thank a lot Ishwarya Sis.
      thank you so much for the wonderful comment.
      it so happy and pleasant to read.
      “Evalo tym padichalum chinna smile irunthute iruku”
      Wow semma feel thank you so much

      Like

Say your thought